மலர்
காற்றாலே பிறந்து
இயற்கையின் படைப்பில்
இணையில்லா அதிசயம்,
அழகின் இலக்கனம்,
அமைதியின் காட்சி,
நிறங்கள் அனைத்தும்
இவளிடம் இருக்கவே
என்றும் விரும்பும்,
மயக்கும் தென்றலில்
மணக்கும் வாசம்,
யாருக்கு இல்லை
இவளிடம் நேசம்,
வானத்தின் கரங்கள்
காதல் கீதம்
என்றும் பாடும்,
மேகங்கள் யாவும்
மழையை பொழிந்து
தங்கள் அன்பை
தவறாமல் கூறும்,
அழகு பூங்காக்களில்
இவள் சுழ்ந்திருப்பாள்,
புதைக்கும் கல்லரையிலும்
இவள் பூத்திருப்பால்,
நாணத்துடன் இருக்கும்
பெண் என்றாலும்
தலைக்கு மேலே
இவள் இருப்பாள் ,
காதலுக்கும் இவள் தேவை
கடவுளுக்கும் இவள் தேவை.
-கிஷோர் குமார்
No comments:
Post a Comment