நண்பனைத் தேடி:
கடல் அலைகள் கால்களை நனைக்க
நினை வளைகளோ மனதில் திளைக்க
வீசும் காற்று வருடும் பொழுது
கடந்த காலமோ நினைவில் வருது,
பேசிய வார்த்தைகள் மனதில் இருக்கு
பழகிய நாட்கள் நினைவில் இருக்கு
உன் நினைவுகளோ அருகில் இருக்க
நீ மட்டும் ஏனோ தொலைவில் இருக்க.
சுற்றியும் இயற்கை விரிந்து கிடக்க
சுகமான காற்று இதமாக வீச
சுற்றி திரிந்த நாட்களோ நெகிழ்ச்சி
சொன்னால் விளங்காது அந்த மகிழ்ச்சி.
பசுமை சூழ்ந்த வயல் வெளியில
பசிய மறந்து ஆடிய நாளெல்லாம்
பசு மரத்து ஆணிய போல
பசுமையா இருக்கு நெஞ்சுக்குள்ள.
வீட்டுக்கு ஒரே தொல்லயாவும்
இயற்கைக்கு ஒரு பிள்ளையாவும்
இருந்தோம் அன்று இன்பமாக
இணை பிரியா இரு நண்பராக.
மணலை எல்லாம் ஒன்னா ஒட்டி
மழையில் இருந்து அதை காக்க
மழலை கைகள ஒன்னா கோர்த்தோம்.
ஏரியின் ஓரம் இருக்கும் பாறையில
ஏரி கொஞ்சம் நாம போரையில
எவரஸ்டு மேல போவத போல
எண்ணம் இருந்தது நெஞ்சிக்குள்ள.
ஒரு மயில் தூரத்துல
ஓடி நீயும் வாரையில
அசரீரி ஏதும் சொல்லவில்ல
ஆனாலும் நீதான்னு மனம் சொல்ல.
ரெண்டு பேரும் கைகள சேர்க்க
ரேகை தேய கைகளோ வேர்க்க
உலகம் மறந்து திரிஞ்சோம் அன்று
உள் மனசுல பறந்தோம் அன்று,
ஆட்ட வெட்டி பலி கொடுக்க
அருவா ஒருத்தன் தீட்டி எடுக்க
அவன ஏனோ திட்டி தீத்தோம்
ஆட்டின் மேல பாவம் பாத்தோம்.
காலுல ஒரு முள்ளு குத்த
காது கிழிய நானோ கத்த
முள்ள நீயும் எடுத்து விட்ட
முதுகல தான் சுமந்து கிட்ட.
கிழிஞ்சி போன ஒரு சட்ட
போட்டு வந்தத பாத்து விட்டு
புது சட்டைய கிழிச்சி கிட்ட
புத்தி கெட்டவன்னு உங்கப்பா திட்ட.
யாரோ ஒருவன் சொந்த தோப்புல
யாரும் பாக்கா அந்த நேரத்தில
மங்கா பறிச்சி தின்னோமே
மாட்டி முழிச்சி நின்னோமே.
கண்னுக்கு எட்டாத உயரத்தை வென்று
கரும் பாறையால் பெயர்கள அன்று
கலங்கரை விலக்குல செதுக்கி வெச்சோம்
காலம் கடந்தாளும் காத்து வெச்சோம்.
குச்சு ஐசு ஒன்னு வாங்கி
எச்சு ஊற அத தாங்கி
ரெண்டு பேரும் ஒன்னா தின்னோம்
ரேசுளையும் ஒன்னா போனோம்.
ஒரு கட்டையால் மறு கட்டய
ஓரம் தட்டி ஓங்கி அடிச்ச
கில்லிய இன்னும் மறக்க வில்ல
கிரிக்கெட்டோ நமக்கு தெரிஞ்ச தில்ல.
விவரம் தெரியாத அந்த நாட்களில்
விளையாடி மகிழ்ந்தோம் எல்லா நாளும்
விவரம் தெரிஞ்ச இந்த நாட்களில்
வினாவா இருக்கு ஒவ்வொரு நாளும்.
மழைக்கு பின்னே மண் வாசம்
அழைக்கும் முன்னே உன் நேசம்
இதுவே அன்று நம் தேசம்
இன்றோ எங்கே இருக்கு பாசம்.
எது செஞ்சாலும் தப்பு இல்ல
ஏனு கேட்க யாரு மில்ல
ஏமாத்த நமக்கு தெரிஞ்ச தில்ல
ஏளனம் பேசி மகிழ்ந்த தில்ல.
கவலைகள் அன்று இருந்த தில்ல
கடமைகள் என்று எதுவும் இல்ல
கனவுகள் தொல்ல கொடுக்க வில்ல
காகித கப்பலே கனவின் எல்ல.
விடுமுறை நாளில் வயல் காடு
விடாது பிடிக்க ரெண்டு மாடு
இந்த வாழ்வில் இன்பம் இருக்கு
இப்போ அது எங்கே இருக்கு.
கண்கல கட்டி சுத்துன என்ன
கண்டு புடிச்சேன் தவறாம உன்ன
கண்கல இன்று கட்ட்டவும் இல்ல
கண்டு பிடிக்க முடியவும் இல்ல.
மண்ணில் விளையாடி மகிழ்ந்த காலம்
மனதில் நீங்காத வண்ண கோலம்
மீண்டும் வருமா அந்த காலம்
மனமோ ஏங்குது ஒவ்வொரு நாளும்.
-கிஷோர் குமார்
No comments:
Post a Comment