கருணை
பிறக்கும் முன் காப்பது
பெண்ணின் கருணை
இறந்த பின் காப்பது
மண்ணின் கருணை.
இரவின் வெளிச்சம்
நிலவின் கருணை
விடியல் என்பது
இரவின் கருணை.
நல்ல கவிதை
சொற்களின் கருணை
வளர்ந்த விதை
நீரின் கருணை.
எல்லை மீராதது
அலையின் கருணை
பயிர்களின் வளர்ச்சி
மழையின் கருணை.
திரை நட்சத்திரங்களை
கரை செய்யாதது
பத்திரிகையின் கருணை.
சிறை கைதிகளுக்கு
முறை செய்வது
அதிகாரியின் கருணை.
பகலையும் இரவையும்
பகிர்ந்து கொடுப்பது
பூமியின் கருணை
வருடம் தோறும்
வருடும் காற்று
இயற்கையின் கருணை
வருடம் தோறும்
வருடும் காற்று
இயற்கையின் கருணை
தாங்கி பிடிப்பது
கைகளின் கருணை
தளராமல் நடப்பது
கால்களின் கருணை.
பிடித்தவனுக்கு உதவுவது
மனிதனின் கருணை
பிடிக்காதவனுக்கு உதுவுவது
மாமனிதனின் கருணை.
இதயெல்லாம் படித்தது
உங்கள் கருணை
இத்துடன் முடிப்பது
எனது கருணை.
-கிஷோர் குமார்
No comments:
Post a Comment